Touring Talkies
100% Cinema

Thursday, July 17, 2025

Touring Talkies

அனுபமா பரமேசுவரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பரதா’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஜானகி vs. ஸ்டேட் ஆப் கேரளா’ இன்று மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அனுபமா ‘பரதா’ என்ற புதிய திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது.

இந்த திரைப்படத்தை பிரவீன் கண்ட்ரேகுலா இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் ‘சினிமா பண்டி’ மற்றும் ‘சுபம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பரதா’ திரைப்படம் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இத்திரைப்படம் ஆகஸ்ட் 22ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் நடிகைகள் சங்கீதா கிரிஷ் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை ஆனந்த மீடியா நிறுவனம் தயாரித்து, இசையமைப்பாளராக கோபி சுந்தர் பணியாற்றியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News