தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண் விஜய், தற்போது கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அவருடன் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க, இசையை சாம்.சி.எஸ் அமைத்துள்ளார்.

‘ரெட்ட தல’ திரைப்படத்தில் அருண் விஜய் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர், இப்படம் பல திருப்பங்களும் த்ரில்லான சம்பவங்களும் நிறைந்ததாக உருவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் ‘கண்ணம்மா’ பாடலை நடிகர் தனுஷ் பாடியிருந்தார். அந்தப் பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
தற்போது, ‘ரெட்ட தல’ திரைப்படம் வரும் டிசம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

