சன் டிவியில், 5 ஆண் நண்பர்களுடனான பெண்ணின் நட்பை மையமாக வைத்து இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் திருப்பங்களுடன் ரஞ்சனி தொடர் ஒளிபரப்பாகி வந்தது.இத்தொடரில் நடிகை ஜீவிதா நாயகியாகவும், அவருக்கு ஜோடியாக சந்தோஷும் நடித்து வந்தனர். இவர்கள் மட்டுமின்றி கிரிஷ், சுதர்சனம், சரத்குமார், சல்மான், ரஞ்சனி போன்ற துணைப் பாத்திரங்களின் நடிப்பும் தொடருக்கு நல்ல வரவேற்பையும் ரசிகர்களையும் பெற்று தந்தது. இதனிடையே 5 நண்பர்களில் ஒருவரான சந்தோஷை, கரம் பிடிக்கும் சூழலைப் போராடி ரஞ்சனி வென்றதாக இத்தொடர் வெறும் 152 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது.பகையை வெல்லும் பேராயுதம் அன்பு மட்டுமே என்பதையே கதையில் கருவாகக் கூற விரும்பியதால், குறுகிய காலமாக ஒளிபரப்பாகியிருந்தாலும், கதையின் அடர்த்திக்காக தொடர் முடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
