சமீபத்தில் விமர்சனங்களுக்கு மத்தியில் திரைக்கு வந்து கவனம் ஈர்த்த பேட் கேர்ள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டைப் பெற்றவர் சரண்யா ரவிச்சந்திரன். ‘டீசல்’, ‘லாயர்’ போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கும் இவர், பெண்களுக்கு எதிராக சமூகத்தில் தொடர்ந்து அநீதி நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

பேட் கேர்ள் வெளியாவதற்கு முன்னரே, “பெண்களை மோசமாக சித்தரித்திருக்கிறார்கள்” என விமர்சனங்கள் எழுந்தன. படம் திரையரங்குகளில் வெளியான பிறகும், இருந்தாலும் இப்படியா என என்கிற குற்றச்சாட்டுகள் தொடர்ந்தன. ஆண்கள் தவறு செய்தால் சமூகம் அடக்கி மறைக்கிறது, ஆனால் பெண்கள் தவறு செய்துவிட்டால் உடனே எள்ளி நகையாடி கேவலப்படுத்துகிறார்கள் என்று அவர் கூறினார்.
தெரிந்தே செய்வதே தவறு. படத்தில் காதல் தோல்விகளை சந்தித்த ரம்யா கதாபாத்திரத்தை மட்டுமே கேவலமாக பேசினார்கள்; ஆனால் ஏமாற்றிய ஆண்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. கலாச்சாரத்தை மீறுவது சினிமாவின் நோக்கம் அல்ல; நிஜத்தைச் சொல்லுவதே அதன் நோக்கம். உலகத்தில் காதல் தோல்விகளைச் சந்திக்காதவர்கள் யாருமில்லை. கடைசியில் நிலைத்துக் கொள்கிறது உண்மையான காதலே, அது பலருக்கு வாழ்க்கைத்துணையாக அமைந்துள்ளது. ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அதுவே உண்மை. படத்தை படமாக பாருங்கள், பெண்களையும் சமமாக மதியுங்கள் என்றுள்ளார்.