பாக்கியலட்சுமி தொடரின் இறுதி நாள் காட்சி புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல், 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி.இத்தொடர் இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ள நிலையில், இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. பாக்கியலட்சுமி தொடரின் கிளைமேக்ஸ், பரபரப்பு காட்சிகளுடன் படமாக்கப்பட்டுள்ளன.
