Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

இந்த கதைக்களம் மனதை கவரும்… நிச்சயமாக சிட்டாடல் வெப் தொடர் பாருங்கள் – நடிகை சமந்தா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஹாலிவுட் திரையுலகில் வெளியான அதிரடி ஆக்ஷன் தொடரான ‘சிட்டாடல்’ தொடரில் வருண் தவான் மற்றும் சமந்தா நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இந்த இந்தியத் தொடரை டி2ஆர் பிலிம்ஸ், அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ், மற்றும் ரூசோ பிரதர்ஸின் ஏஜிபிஓ இணைந்து தயாரித்துள்ளனர். ‘சிட்டாடல் : ஹனி பன்னி’ என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட இந்த தொடர், நவம்பர் 7ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது.

இந்த தொடரை ராஜ் – டிகே இயக்கியுள்ளனர். இதில் கேகே மேனன், சிம்ரன், சாகிப் சலீம், சிக்கந்தர் கெர், சோஹம் மஜும்தார், சிவன்கித் பரிஹார், மற்றும் காஷ்வி மஜ்முந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமந்தா, இதில் திரைப்பட நடிகையாகவும், அதிரடி உளவாளியாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள டீசரில் சமந்தாவின் ஆக்ஷன் சண்டைக்காட்சிகள் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

சமந்தா இதுகுறித்து கூறுகையில், “இந்த தொடரில் மனதை கவரும் கதைக்களம், ஆழமான கதாபாத்திரங்கள் மற்றும் சர்வதேச தரத்திற்குப் பொருந்தும் சண்டைக்காட்சிகளுடன் ஆக்ஷன் நிறைந்த பொழுதுபோக்கின் ஒரு பகுதியாக இது இருக்கும். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க முடிவது எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு. இதில் உள்ள உளவுத் தன்மையான கதையமைப்பே என்னை மிகவும் ஈர்த்தது. இந்தத் தொடரை இந்தியாவிலேயே மட்டுமல்லாது, பல நாடுகளில் இருக்கும் பிரைம் வீடியோ பார்வையாளர்கள் ரசிக்க வேண்டும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News