தமிழில் அமீர் இயக்கத்தில் வெளியான ‛பருத்திவீரன்’ நடிகர் சரவணன், “சட்டமும் நீதியும்” என்ற வெப்சீரிஸில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில், ஐகோர்ட் வளாகத்தில் தீக்குளித்து உயிரிழக்கும் ஒருவர் சார்பாக நீதியை தேடும் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த வெப்சீரிஸை பாலாஜி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

இந்த கதாபாத்திரம் குறித்து பேசும் போது சரவணன் கூறியதாவது, நான் டிராபிக் ராமசாமியை போலவே நீதிக்காக போராடும் ஒருவராக நடித்திருக்கிறேன் என பலரும் பாராட்டுகின்றனர். எனக்கும் டிராபிக் ராமசாமியுடன் நல்ல தொடர்பு உண்டு. அவர் சாதனைகள் எளிதாக முடியாதவை. இந்த வெப்சீரிஸில் நீதியின் வெற்றி என முடிவாகிறது. ஆனால் நிஜ வாழ்க்கையில் அது போல இருக்காது. நானே சில வழக்குகள் போடிவைத்துள்ளேன். இப்போது கூட அந்த வழக்குகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. 5 ஆண்டுகளாக அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நம்மைச் சுற்றி வழக்குகள் அதிகம் இருக்கின்றன. ஆனால் நீதிமன்றங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. அதனாலேயே நேரம் தேவைப்படும்.
இந்த கதாபாத்திரத்தை கொடுத்த இயக்குநருக்கு நன்றியுடன் இருக்கிறேன். நல்ல கதை, நல்ல வேடம். இந்த வெப்சீரிஸை 15 நாட்களில் முழுமையாக நடித்துத் தந்துவிட்டோம்” என்றார்.