71வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது, ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ‘பார்க்கிங்’ திரைப்படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தை ராம் குமார் பாலகிருஷ்ணன் எழுதியும் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் தனது சிறந்த நடிப்புக்காக எம்.எஸ் பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். மேலும், சிறந்த திரைக்கதைக்கான விருதும் ‘பார்க்கிங்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்டு, அதை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணனே பெற்றுள்ளார்.
இந்த வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியதோடு, படத்தில் நடித்தவர்களும் தொழில்நுட்பக் குழுவினரும் அனைவரும் சேர்ந்து கொண்டாடும் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தனர். அந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது.