2026 ஆஸ்கர் விருதுகளுக்காக சில புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது ஆஸ்கார் அமைப்பு. கடந்த காலங்களில் ஆஸ்கர் விருது போட்டிக்காக வந்த சில படங்களை ‘அகாடமி வாக்காளர்கள்’ பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. அதற்காக, ‘அகாடமி வாக்காளர்கள்’ வாக்களிப்பதற்கு முன்பாக அவர்கள் பார்த்த அனைத்து படங்களையும் ‘பார்த்துவிட்டோம்’ என்பதை உறுதி செய்தாக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களை அதற்குரிய பிரத்யேக இணையதளத்தில் கண்காணிக்கவும் முடிவெடுத்துள்ளார்கள்.அதுமட்டுமல்லாது, ‘ஏஐ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படங்களை வரவேற்கும் விதமாகவும் சில வழிகாட்டுதல்களை அகாடமி வெளியிட்டுள்ளது. ஒரு மனிதன் எந்த அளவிற்கு படைப்பாற்றல் மிக்க படைப்பாளியாக இருக்கிறார் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்வதாக அகாடமி கூறியுள்ளது.
