Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

பிரபல தொடரான மர்ம தேசம் தொடர் இயக்குனரின் அடுத்த படைப்பு… எதிர்ப்பார்ப்பை தூண்டிய டீஸர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை சாய் தன்ஷிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள “ஐந்தாம் வேதம்” என்ற வெப் தொடர் விரைவில் வெளியாக உள்ளது. இந்த வெப் தொடரை இயக்கியவர் நாகா. நாகா என்பது 90களில் மிக பிரபலமாக ஒளிபரப்பப்பட்ட “மர்ம தேசம்” தொடரின் இயக்குநர். அந்த தொலைக்காட்சி தொடருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் இருக்கும் நிலையில், அவரின் இயக்கத்தில் வந்த அந்த தொடர் பெரும் வெற்றிபெற்றது.

தொடைந்த இடைவேளைக்கு பின், நாகா தற்போது “ஐந்தாம் வேதம்” வெப் தொடரை இயக்கியுள்ளார். இதில் சாய் தன்ஷிகாவுடன் சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய்.ஜி. மகேந்திரன், கிரிஷா குருப், பொன்வன்னன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் தொடரை அபிராமி மீடியா நொர்க்ஸ் தயாரித்துள்ளது.

இந்த தொடரின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. “ஐந்தாம் வேதம்” தொடரின் டீசர் இதுவரை வெளியாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில், இது ஒரு திரில்லர் மற்றும் மர்மம் நிரம்பிய தொடராக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அக்டோபர் 25 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் இந்த தொடர் வெளியாகவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

- Advertisement -

Read more

Local News