ராயன் படத்தைத் தொடர்ந்து, தனுஷ் இயக்கியுள்ள புதிய படம் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்”. இதில் கதாநாயகனாக தனுஷின் அக்கா மகன் பவிஷ் அறிமுகமாகிறார். அனைகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளார்.
இந்த படத்தை 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி திரையரங்கில் வெளியிடுவதாக தனுஷ் சமீபத்தில் அறிவித்தார். இப்படத்தின் முதல் பாடலான “கோல்டன் ஸ்பேரோ” ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகி, யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துவிட்டது. அதேபோல், “காதல் பெயில்” எனும் இரண்டாவது பாடலும் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடலான “ஏடி” டிசம்பர் 20ஆம் தேதி, அதாவது நாளை வெளியாகவுள்ளது. இந்த பாடலின் பாடல்களை விவேக் எழுதியுள்ளார். இதைத் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.