Touring Talkies
100% Cinema

Tuesday, June 24, 2025

Touring Talkies

நடிகர் மோகன் பாபு 7000 ஏக்கர் நிலம் வாங்க உள்ளதாக கூறப்பட்ட தகவல் நகைச்சுவை தான்‌… உண்மையல்ல – நடிகர் பிரம்மஜி விளக்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘கண்ணப்பா’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நடிகர் மோகன் பாபு தனது மகன் விஷ்ணு மஞ்சுவுக்காக நியூசிலாந்தில் 7,000 ஏக்கர் நிலம் வாங்க உள்ளதாகக் கூறும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், இந்த வீடியோவில் கூறப்பட்ட தகவல்கள் நகைச்சுவைக்காகவே சொல்லப்பட்டவை என நடிகர் பிரம்மஜி தெளிவுபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட விளக்கத்தில், “யாரும் எந்த நிலத்தையும் வாங்கவில்லை. அந்த வீடியோ முழுவதும் நகைச்சுவைக்காகவே எடுக்கப்பட்டது. அதை உண்மையாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என பதிவிட்டுள்ளார்.

வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை அர்ப்பணிப்புடன் வழிபட்ட பக்தன் கண்ணப்பரின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, பிரபாஸ், அக்சய் குமார், மோகன்லால் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகிற 27ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News