தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கத்தில் உருவாகிய படம் டெஸ்ட். இப்படத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின், ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது, சென்னையில் நடைபெற்ற ஒரு வரலாற்று சிறப்புமிக்க சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது நிகழ்ந்த திருப்புமுனையை மையமாகக் கொண்டு உருவானது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு பதிலாக, நேரடியாக ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் மூலம் வெளியிடப்படுகிறது. இதன் வெளியீடு நாளை, ஏப்ரல் 4-ம் தேதி வெள்ளிக்கிழமை, நேரடியாக நெட்ப்ளிக்ஸ் தளத்தில் நடைபெற உள்ளது.
ரசிகர்கள், இந்தப் படம் எந்த நேரத்தில் வெளியாகும் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கிடைத்த தகவலின்படி, டெஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 4-ம் தேதி மதியம் 12 மணிக்கு நெட்ப்ளிக்ஸில் வெளியாவது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது