கன்னட சினிமா ஒரு காலத்தில் கர்நாடக மாநிலத்துக்குள் மட்டுமே சுருங்கியிருந்தது. ஆனால் கேஜிஎப் மற்றும் காந்தாரா படங்களின் பிரம்மாண்டமான வெற்றிக்கு பிறகு கன்னட சினிமா இந்திய திரையுலகில் மிகவும் கவனம் ஈர்க்கும் ஒன்றாக மாறியது.

இந்நிலையில், கடந்த மாதம் கன்னடத்தில் வெளியான சூ ப்ரம் சோ திரைப்படம், வெறும் 25 நாட்களில் 100 கோடி வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பிடத்தக்கது என்னவெனில், இந்த படம் வெறும் ஆறு கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதே.
இந்த படத்தை இயக்கியவர் ஜேபி துமினாடு. மேலும் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் ராஜ் பி. ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த கூலி, வார் 2 போன்ற பெரிய படங்களின் தாக்கத்திலும் கூட, இந்த படத்தின் வசூல் குறையாமல் இருப்பது திரையுலகத்தில் பேசப்படும் விஷயமாக உள்ளது. ஹாரர் கலந்த நகைச்சுவை, அதேசமயம் எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டிருப்பதால், இந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.