நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக்கியுள்ளது ‘கூலி’ திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் அமீர்கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் மீது ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், இந்தப் படத்தில் இடம்பெற்ற பூஜா ஹெக்டே நடனமாடிய ‘மோனிகா’ பாடல் வெளியானதும், அது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், படம் தொடர்பான டிரெய்லர் வெளியீடு பற்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், இந்த படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகும் என உறுதிபடுத்தியுள்ளார்.
மேலும், சமீபத்திய நேர்காணலில் லோகேஷ் கனகராஜ், “கூலி படத்திற்கு எனக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூ.50 கோடி. இந்த இரண்டு வருட உழைப்பிற்கான மதிப்பீடு மட்டுமில்லாமல், ‘லியோ’ திரைப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்ததைத் தொடர்ந்து இந்தப் படத்தில் எனது சம்பளம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.