Touring Talkies
100% Cinema

Thursday, June 12, 2025

Touring Talkies

DNA திரைப்படம் உங்களை கவரும்… நிச்சயம் படம் பார்த்தபின் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் – நடிகை நிமிஷா சஜயன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள திரைப்படங்களிலே நிமிஷா சஜயன் ஒரு சிறந்த நடிகை என பெயர் பெற்றவர். அவரது நடிப்பும், அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களும் அவரை மெருகூட்டுகின்றன. தி கிரேட் இந்தியன் கிச்சன், மாலிக், நாயாட்டு போன்ற படங்கள் அவரது முக்கிய படைப்புகளாகும். தமிழில் சித்தா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மிஷன் சேப்டர் 1 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள டிஎன்ஏ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நெல்சன் இயக்கிய முன்னிலை படங்களில் ஒருநாள் கூத்து, பர்ஹானா, மான்ஸ்டர் ஆகியவற்றில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருந்தது போல, டிஎன்ஏ படத்திலும் நிமிஷாவின் கதாபாத்திரம் மையமாக கதையின் பரிணாமம் நகரும் எனக் கூறப்படுகிறது. இதில் அவர் அதர்வா ஜோடியாக நடித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற டிஎன்ஏ பட விழாவில், ஹீரோவிற்கும் மேலாக பல சிறப்பு விருந்தினர்கள் நிமிஷாவை பாராட்டினர். திரைபடங்களில் எப்போதும் எளிமையாகவே நடிக்கும் நிமிஷா, இந்த விழாவுக்கு வித்தியாசமாக கிளாமர் புடவையில் வந்து, மலையாளம் கலந்த தமிழில் பேசியார். தனக்குச் செட்டில் டயலாக் சொல்லிக் கொடுத்த உதவி இயக்குநர்களுக்கும் நன்றியுரை தெரிவித்தார். விழா முடிவில், “படத்தை பார்த்த பிறகு என் நடிப்பைப் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் இது என் அன்பான வேண்டுகோள் என கூறியுள்ளார்

- Advertisement -

Read more

Local News