விக்கி கவுசல் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘சாவா’ படம் முதல் நாளில் உலக அளவில் ரூ..50 கோடி வசூல் செய்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை வெளியான பாலிவுட் படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய படமாக இது மாறியுள்ளது.இந்த நிலையில், இப்படம் வெளியாகி 33 நாள்களிலேயே உலகளவில் ரூ. 761 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், இந்தியாவில் மட்டும் ரூ. 560 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியதாகத் தெரிகிறது. முக்கியமாக, மகாராஷ்டிரத்தில் பல திரைகளில் ஹவுஸ்புல் காட்சிகளாகவே திரையிடப்படுவதால் இப்படம் மேலும் வசூலைக் குவித்து இந்தாண்டின் மிகப்பெரிய ஹிட் படமாக மாறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
