பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸின் சார்பில் முரளி கபீர்தாஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘அந்த 7 நாட்கள்’. இப்படத்தில் புதுமுக நடிகர்கள் அஜித்தேஜ் மற்றும் ஸ்ரீஸ்வேதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பாக்யராஜ் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய், ஏ.பி. ஜனகன், வாசு சீனிவாசன், ராகவன், சாய் கோபி, விதுஷ்ணவி, ஆதித்யா, கவிப்ரியா, ராம்ஜி, மோகனா, செம்புலி ஜெகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை எம். சுந்தர் இயக்கியுள்ளார். இசையை சச்சின் சுந்தர் அமைத்துள்ளார்.

இந்த படத்தின் குறித்தும் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ் கூறியதாவது: ‘அந்த 7 நாட்கள்’ எனும் படத் தலைப்பு எங்கள் கதைக்கும் பொருத்தமாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். எனவே அந்த தலைப்பையே தேர்வு செய்தோம்.
கே. பாக்யராஜ் சாரிடம் இந்த தலைப்பை பயன்படுத்த அனுமதி கேட்க, அவர் உடனடியாக ஒப்புதல் அளித்தார். மேலும், அந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவும் அவர் சம்மதித்தார். இந்த திரைப்படம் சென்னை மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் 45 நாட்களுக்குள் படமாக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.