மோகன் ராஜா இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவா இசையில், 2004 ஆம் ஆண்டு வெளியான ‘எம் குமரன் S/o மகாலட்சுமி’ திரைப்படம் ஜெயம் ரவி, அசின், நதியா, பிரகாஷ் ராஜ், விவேக் மற்றும் பலர் நடித்துப் பெரும் வெற்றி பெற்றது. இந்த படம், தெலுங்கில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் உருவான ‘அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

ரீமேக் படமாக இருந்தாலும், ராஜா இந்த கதையை தமிழர்களின் ருசிக்கு ஏற்ப மாற்றியமைத்து, ஜெயம் ரவியின் முக்கியமான படங்களில் ஒன்றாக மாற்றியுள்ளார்.இப்போது, 20 ஆண்டுகள் கழித்து, இந்த படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீசாகியுள்ளது.
இதில் ரவி மோகனின் தாயாக நடித்த நதியா இந்த சம்பவம் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். “எனக்குப் பிடித்த படம் ‘எம் குமரன் S/o மகாலட்சுமி’. இது என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாகும். 20 ஆண்டுகளுக்குப் பிறகு இது மீண்டும் வெளியாகிறது என்பது எனக்கு பெரும் சந்தோஷம். எல்லா வயதினரையும் கவர்ந்த இந்த மறக்க முடியாத படத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு ஒரு இனிய அனுபவம். இந்த வாய்ப்பை அளித்த குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்துள்ளார்.