தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் நேற்றுடன் வெளியாகி மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதனை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலானது. மேலும், திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை பற்றி பிரகாஷ் ராஜ் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அதாவது, “அழகான தருணங்களின் மூன்று வருட திருச்சிற்றம்பலம் நினைவுகள்.. அரவணைப்பு.. பிணைப்பு நேற்று போல் உணர்கிறது. தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா சார்,மித்ரன் ஜவஹர், சன்பிக்சர்ஸ், முழு படக்குழு மற்றும் அன்பை பொழிந்த அன்பான பார்வையாளர்கள் அனைவரும் நன்றி” என்று அதில் பதிவிட்டுள்ளார்.
