தமிழில் ‘முனி’, ‘சக்கரகட்டி’, ‘காளை’, ‘பரதேசி’, ‘காவிய தலைவன்’, ‘காஞ்சனா-3’, ‘பேட்டாராப்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. திரையுலகில் தனக்கென ரசிகர்களை கொண்டிருக்கும் அவர், அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், உடைகளை வைத்து நடிகைகளின் தரத்தை மதிப்பிட வேண்டாம் என்று அவர் ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். “பொதுவாகவே நடிகைகளைக் எளிதில் விமர்சித்து விடுகிறார்கள். கவர்ச்சியாக உடை அணிந்தாலே போதும், தேவையற்ற பேச்சுகள் ஆரம்பமாகிவிடுகின்றன.
இந்தப் போக்கு மாற வேண்டும். நானும் சில சமயங்களில் பிகினி அணிவேன். விமர்சனங்களுக்கு நான் கவலைப்படுவதில்லை. நான் யார் என்று எனக்கு தெரியும். தவறான மனநிலை கொண்டவர்கள் தான் மாற வேண்டும்” என்று வேதிகா தெரிவித்துள்ளார்.