தமிழில் பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மோகன்ஜி, பின்னர் திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் போன்ற படங்களை இயக்கினார். சமீபத்தில் செல்வராகவன் நடிப்பில் பகாசுரன் திரைப்படத்தை இயக்கி முடித்திருந்தார்.

இப்போது, திரௌபதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதாக அறிவித்துள்ளார். முதல் பாகத்தில் நாயகனாக நடித்த ரிச்சர்ட், இதிலும் கதாநாயகனாக நடிக்கிறார். ட்விட்டரில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட மோகன்ஜி, “வீரசிம்ம காடவராயன்… மீண்டும் திரௌபதியின் மிரட்டல் ஆரம்பம். தென்னகத்தை ஆண்ட ஹொய்சாள பேரரசன் மூன்றாம் வீர வல்லாளர் மற்றும் சேந்தமங்கலத்தை ஆண்ட காடவராயர்களின் வீரம், தியாகம், ரத்த சரித்திரம் இதோ திரௌபதி 2. விரைவில் திரையில் சந்திப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, முதல் பாகத்தின் கதையுடன் இந்தக் கதைக்கு தொடர்பில்லை. இது சரித்திரக் காலத்தில் நடந்த மோதலை மையமாகக் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.