Touring Talkies
100% Cinema

Thursday, June 19, 2025

Touring Talkies

Good Wife படத்தில் கதாநாயகியின் கதாபாத்திரம் மிக வலிமையானதாக இருக்கும் – நடிகையும் இயக்குனருமான ரேவதி டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ரேவதி, இயக்குநராக தனது பயணத்தைத் தொடங்கி, இயக்கிய மித்ரூ மை பிரண்ட் திரைப்படம் பல விருதுகளை வென்றதுடன், தரமான இயக்குநராக அவருக்கு ஒரு முக்கியமான அங்கீகாரத்தையும் வழங்கியது. அதன் பின்னர் பல படங்களை இயக்கிய ரேவதி, தற்போது இயக்கியுள்ள வெப் தொடர் Good Wife ஆகும். இதில் பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தத் தொடர், இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற தொடரின் தமிழ் ரீமேக்.

இந்தத் தொடரைப் பற்றிக் கூறும் போது, ரேவதி, “இந்தி ரீமேக்கான குட் வொய்ப் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இதனை தமிழில் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இந்தக் கதையில் கதாநாயகியின் பாத்திரம் மிகவும் வலிமையானது. தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் தொழில் சார்ந்த சவால்கள் என பல பரிமாணங்களை அவர் எதிர்கொள்கிறார். 

இதனைத் திரைக்கதையாகக் கொண்டு உருவாக்குவது எனக்கு மிகுந்த ஆர்வமான அனுபவமாக இருந்தது. பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் போன்ற திறமையான நடிகர்களுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் பானிஜே ஆசியா ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஓடிடி உலகில் நான் எடுத்த முதல் கட்டமான அனுபவம் இது” என்று தெரிவித்தார். இந்தத் தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியிடப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News