Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த கங்குவா பட நாயகி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட்டின் பிரபல நடிகை திஷா பதானி. தமிழில் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா படத்தில் நாயகியாக நடித்தார். பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். தற்போது டுராங்கோ என்ற அமெரிக்க ஆன்லைன் தொடரில் நடித்து வருகிறார்.

மெக்சிகோவில் நடைபெறும் இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு செட்டில், ஹாலிவுட் நடிகர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த வெப் தொடரின் மூலம் திஷா பதானி ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

ஏற்கனவே பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரும் ஹாலிவுட் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்கள். இப்போது திஷா பதானியும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News