Tuesday, December 17, 2024

கோலாகலமாக நடைபெறும் வணங்கான் இசைவெளியீட்டு விழா மற்றும் இயக்குனர் பாலாவின் 25ம் ஆண்டு திரைப்பயண விழா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குநர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். தனது தங்கையை வன்கொடுமை செய்தவர்களை சிறையில் இருந்து வெளிவந்து பழி வாங்கும் கதையாக வணங்கான் திரைப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.

படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். யு/ஏ சான்றிதழ் பெற்ற இந்த படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பின்னணி இசையை சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை வி கவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி மற்றும் இயக்குநர் பாலாவின் பி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (18 டிசம்பர்) மாலை 5 மணிக்கு நந்தம்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழா, இயக்குநர் பாலா திரையுலகிற்கு வந்து 25 வருடம் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News