தமிழ் திரைப்படங்களை விட, பிற மொழி திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் அதிகமாக வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் ஒரு மலையாள திரைப்படம் ஓடிடி தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியீட்டு வெற்றிப் பெற்ற படம் தான் மலையாள திரைப்படமான ‘தி காம்பினோஸ்’.

சஸ்பென்ஸ் மற்றும் குற்றவியல் கதைக்களம் கலந்த இந்த திரைப்படம் வெளியாகி இன்றோடு ஆறு ஆண்டுகள் ஆகிறது. இந்த படத்தின் திரைக்கதை மிகவும் திறமையாக அமைக்கப்பட்டிருப்பதால், இதனை பலமுறை பார்த்தாலும் மீண்டும் பார்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டது. இதனால், இவ்வளவு நாட்களாக இந்த திரைப்படம் எந்த ஓடிடி தளத்திலும் வெளியிடப்படாமல் இருந்தது.
தற்போது, இந்த திரைப்படம் ‘மனோரமா மேக்ஸ்’ என்ற ஓடிடி தளத்தில் மார்ச் 28ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது மற்றும் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இதில் ராதிகா சரத்குமார், சம்பத் ராஜ், விஷ்ணு வினய் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை கீரிஸ் பணிக்கர் இயக்கியுள்ளார்.