நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘இட்லி கடை’. இப்படத்தில் நடிகர்கள் ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய், நித்யா மேனன் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை ‘டான் பிக்சர்ஸ்’, ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ மற்றும் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இசையை ஜி.வி. பிரகாஷ் அமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இப்படத்தின் முதல் பாடல் தனுஷின் பிறந்தநாளையொட்டி, ஜூலை 27ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.