டூரிஸ்ட் பேமலி’ பட வெற்றிக்கு பின் நடிகர் சசிகுமார், ‘ஜோக்கர்’, ‘குக்கூ’, ‘ஜப்பான்’ போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘மை லார்ட்’ என தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.
இப்படத்தில் சைத்ரா ஆச்சர் கதாநாயகியாக நடிக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் டீசர், டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் ‘எச காத்தா’ வெளியாகியுள்ளது. இந்த பாடலை சின்மயி மற்றும் சத்யபிரகாஷ் இணைந்து பாடியுள்ளனர். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

