இயக்குநர் மற்றும் நடிகர் என பல திறமைகளுடன் வலம் வருபவர் தனுஷ். இவர் இயக்குநராக தனது நான்காவது திரைப்படமாக ‘இட்லி கடை’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அவர் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசைஅமைத்துள்ளார். இத்திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக அருண் விஜய், இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தின் முதல் பாடல் தனுஷின் பிறந்த நாளான ஜூலை 27ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், ‘இட்லி கடை’ படத்தில் இடம்பெறும் முதல் பாடலை, நடிகர் தனுஷ் எழுதி, பாடகி ஸ்வேதா மோகனுடன் இணைந்து பாடியுள்ளார் என, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.