ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருக்கும் படம் ‘குட் பேட் அக்லி’.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், மற்ற பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. தற்போது, இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த படத்திற்காக இசையமைத்துள்ள நிலையில், முதல் பாடலை ‘ஆலுமா டோலுமா’ பாடலை எழுதிய ராகேஷ் எழுதியுள்ளார். மேலும், அஜித் நடித்த வேதாளம், விவேகம், விடாமுயற்சி ஆகிய படங்களுக்கு இசையமைத்த அனிருத், இந்த பாடலை பின்னணி பாடியாக பாடியுள்ளார்.