சுந்தர் சி மற்றும் வடிவேலு ஆகியோரின் கூட்டணி கோலிவுட் திரையுலகத்தில் மிகப்பெரிய வெற்றிகரமான கூட்டணியாகக் கருதப்பட்டது. ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் பல ஆண்டுகளாக அவர்கள் எந்த ஒரு திரைப்படத்திலும் இணைந்து பணியாற்றவில்லை.

15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் சுந்தர் சி மற்றும் வடிவேலுவின் காமெடி கூட்டணி ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கைப்புள்ள, வீரபாகு போன்ற படங்களில் இருந்த சிங்காரம் என்ற கதாபாத்திரம் போலவே, கேங்கர்ஸ் படத்திலும் வடிவேலு நடித்துள்ளார் எனும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், கேங்கர்ஸ் திரைப்படம் வரும் ஏப்ரல் 24ம் தேதி திரையிடப்பட உள்ளது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் படக்குழுவால் வெளியிடப்பட்டது மற்றும் அது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. வடிவேலு இந்த படத்தில் பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என படக்குழு ஒரு போஸ்டரை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த போஸ்டரில் “குப்பன் தொல்ல தாங்கலயே, இவ நாலு நாளா தூங்கலயே” என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. இந்த பாடல் ஒரு ஐட்டம் சாங் ஆக உருவாக்கப்பட்டுள்ளது.