Touring Talkies
100% Cinema

Friday, March 28, 2025

Touring Talkies

‘பேட் கேர்ள்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தின் இசையை அமித் த்ரிவேதி அமைத்துள்ளார். வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இவர் வெற்றி மாறனின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

படத்தின் இசையை அமித் த்ரிவேதி அமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இத்திரைப்படம், ஒரு டீனேஜ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள் மற்றும் இச்சைகள், அவள் இந்த உலகத்தை எவ்வாறு பார்க்கிறாள் மற்றும் அனுபவிக்கிறாள் என்பதைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மீது ஒரு தரப்பினரால் கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ரோட்டர்டாமில் வழங்கப்படும் மதிப்புமிக்க NETPAC விருதை இந்த திரைப்படம் பெற்றுள்ளது. இப்படத்தின் முதல் பாடலான “ப்ளீஸ் என்ன அப்படி பாக்காதே” என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை கேபர் வாசுகியின் வரிகளில் மாளவிகா மனோஜ் பாடியுள்ளார். திரைப்படம் விரைவில் திரைக்கு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

- Advertisement -

Read more

Local News