Touring Talkies
100% Cinema

Friday, August 1, 2025

Touring Talkies

நான் கல்லூரியை கட் அடித்துவிட்டு பார்த்த முதல் திரைப்படம் ரஜினியின் பாட்ஷா தான் – நடிகர் பகத் பாசில்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் சுதிஷ் சங்கர் இயக்கத்தில் ஃபகத் ஃபாசிலும் வடிவேலுவும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘மாரீசன்’. இத்திரைப்படம் ஜூலை 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், ஒரு பிரபல தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், ஃபகத் ஃபாசில் தனது வாழ்க்கையில் முதல் முறையாக பார்த்த தமிழ்த் திரைப்படத்தைப் பற்றி பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி அவர் கூறுகையில், “நான் கல்லூரியில் படிக்கும்போது ஒரு நாள் கட் அடித்து பார்த்த முதல் தமிழ்த் திரைப்படம் ‘பாட்ஷா’. அது ரஜினிகாந்த் நடித்த படம். அந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிக நயமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரஜினி சார் நடித்த காட்சிகள் அனைத்தும் எனக்குப் புல்லரிக்க வைத்தன. அதில், தங்கைக்கு கல்லூரியில் சேர்க்கை செய்யும் காட்சி எனக்கு மிகவும் பிடித்தமானது.

‛என் பேரு மாணிக்கம், எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ எனச் சொல்லிவிட்டு, சேர்க்கையை முடித்ததும் வெளியே வந்து ‛அட்மிஷன் கிடைச்சாச்சு’ எனச் சொல்வார். அதற்கு தங்கச்சி ‛என்ன சொன்னீங்க?’ எனக் கேட்டபோது, க்ளோஸ் அப் ஷாட்டில் ‛உண்மைய சொன்னேன்’ எனச் சொல்லும் அந்த நிமிடம் எனக்கு மிகவும் ஆச்சரியமளித்தது. ரஜினி சார் படங்களில் ரசிகர்களை நேரடியாகப் பார்த்து பேசும் விதம் என் மனதை பெரிதும் கவர்ந்தது.கல்லூரியில் நான் கோயம்புத்தூரில் இருந்து வந்த நண்பர்களுடன் படித்ததனால் தமிழ் மொழியைப் பழகினேன். அதன் காரணமாக நிறைய தமிழ்த் திரைப்படங்களை பார்க்கத் தொடங்கினேன். ரஜினி சார் நடித்த ‛பாட்ஷா’தான் நான் பார்த்த முதல் தமிழ்த் திரைப்படம்” என ஞாபகங்களுடன் பேசினார்.

- Advertisement -

Read more

Local News