தமிழ் திரையுலகில் ‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகை கயாடு லோஹர். இப்படம் வெற்றி பெற்றதின் மூலம், அவர் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் தமிழ் திரையுலகில் பல படங்களில் இடம்பிடித்து வருகிறார்.
கயாடு லோஹர் தனது திரை பயணத்தை 2021ஆம் ஆண்டு வெளியான ‘முகில்பெட்’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் ‘இதயம் முரளி’ மற்றும் ‘STR 49’ என்ற தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.மேலும், நடிகர் ஜிவி பிரகாஷ் நடிக்கும் அடுத்த படத்திலும் கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். இந்த திரைப்படத்தை மாரியப்பன் சின்னா இயக்குகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘இம்மார்டல்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் ஒரு மர்மம் கலந்த திரில்லர் கதை அமைப்பில் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பை சாம் சி.எஸ் செய்ய, தயாரிப்பை அருண்குமார் தனசேகரன் மேற்கொள்கிறார். இதற்குமுன் ஜிவி பிரகாஷ் தனது 25-வது படமான ‘கிங்ஸ்டன்’ படத்தை முடித்த பின், ‘இடிமுழக்கம்’, ’13’, மற்றும் ‘பிளாக்மெயில்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.