Touring Talkies
100% Cinema

Friday, October 3, 2025

Touring Talkies

மீண்டும் மறு ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் முதல் பாகம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பிரபலமடைந்த தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடர் கணவன் – மனைவி இடையே நடக்கும் புரிதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இத்தொடரில் ரோஷினி, அருண்பிரசாத், ஃபரீனா, ரூபாஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துட இருந்தனர். 2019 பிப்ரவரியில் தொடர் இத்தொடர் 2023 பிப்ரவரி வரை 1000 எபிஸோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பானது. இத்தொடருக்கு கிடைத்த வரவேற்பையடுத்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. ரோஜா தொடரில் நடித்து கவனம் ஈர்த்த சிபு சூர்யன், விணுஷா தேவி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த நிலையில், பாரதி கண்ணம்மா தொடரின் முதல் பாகத்தை மீண்டும் ஒளிபரப்பு செய்ய தொலைக்காட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, இத்தொடர் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினந்தோறும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை 1 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News