Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

திரு.மாணிக்கம் என்கிற படம் ஓர் அற்புதமான படைப்பு… படக்குழுவினரை மனமுவந்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

புதிய இயக்குநர்கள், நடிகர்கள், புதிய திரைப்படங்களை பாராட்டும் வழக்கத்தை ரஜினிகாந்த் பல ஆண்டுகளாகவே மெயின்டெயின் செய்து வருகிறார். அறிமுக இயக்குநர்களுக்கு இவரது பாராட்டு மிகப்பெரிய பூஸ்ட்டாக அமைந்து வருகிறது. சமூக வலைதளங்களில் மட்டுமில்லாமல் நேரிலும் படக்குழுவினரை கூப்பிட்டு பாராட்டுவதை ரஜினிகாந்த் வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள திரு மாணிக்கம் படத்தை தற்போது பாராட்டி ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு நல்ல படத்துக்கு அடையாளம், படம் பார்த்த பிறகு அதில் வரும் காட்சிகள், கதாபாத்திரங்கள் ஒரு மூன்று, நான்கு நாட்களுக்காவது நினைவில் வந்துகொண்டே இருக்கணும். அந்த படத்தில் வரும் எதாவது ஓர் நல்ல விஷயம், நம் வாழ்க்கையில் நாமும் கடைபிடிக்கணும் என்ற எண்ணம் உருவாகணும்.அந்த மாதிரி சமீபத்தில் நான் பார்த்த திரு.மாணிக்கம் என்கிற படம் ஓர் அற்புதமான படைப்பு. உண்மை சம்பவத்தைவைத்து திரைக்கதை, வசனத்தை எழுதி சிறப்பாக இயக்கியிருக்கும் நந்தா பெரியசாமி அவர்கள், தான் ஓர் அற்புதமான இயக்குனர் என்பதை நிருபித்திருக்கிறார். திரையுலகில் அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.இந்த திரைப்படம் இவ்வளவு சிறப்பாக உருவாக பணியாற்றியிருக்கும் மைனா சுகுகுமார், விஷால் சந்திரசேகர், குணா ரகு அவர்களுக்கும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் எனது அருமை நண்பர் சமுத்திரக்கனி, மதிப்பிற்குரிய பாரதிராஜா மற்றும் அனைத்து நடிகர், நடிகைகளுக்கும், இந்த படத்தை தயாரித்திருக்கும் G.P.ரவி குமார் மற்றும் என்னுடைய அருமை நண்பர் லிங்குசாமி மற்றும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.

- Advertisement -

Read more

Local News