கன்னடத் திரைப்படமான ‘காந்தாரா’ கர்நாடக மாநிலத்தில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்தது. அதன் வெற்றிக்குப் பிறகு, இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி உருவாக்கிய ‘காந்தாரா சாப்டர் 1’ படம் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் ருக்மிணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பழங்குடியினர் மற்றும் மன்னர் வம்சத்தினருக்கிடையிலான மோதல்களை மையமாகக் கொண்டு, கடவுள், தொன்மை, மரபுகள் ஆகியவற்றை இணைத்து கதையை உருவாக்கியுள்ளார் ரிஷப் ஷெட்டி.
வெளியாகும் முன்பே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் விளைவாக, ‘காந்தாரா சாப்டர் 1’ படம் தற்போது வரை உலகளவில் ரூ.335 கோடி வசூல் செய்துள்ளது.