தமிழில் வெளியான ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் டாப்சி. ‘காஞ்சனா’, ‘வந்தான் வென்றான்’, ‘கேம் ஓவர்’, ‘அனபெல் சேதுபதி’ போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகையாக மட்டுமல்லாது, தயாரிப்பாளராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் டாப்சி. தற்போது 3 ஹிந்தி படங்களில் பணியாற்றி வருகிறார். முக்கியமான கதைகளில் நாயகியாக நடித்து வருபவர், ஷாருக்கானுடன் ‘டன்கி’, வருண்தவணுடன் ‘ஜுட்வா 2’ படங்களில் நடித்துள்ளார்.
இந்த சூழலில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காந்தாரி படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், “சூழ்நிலை கடினமான போது, வலிமையானவர்கள் சவால்களை எதிர்கொள்ள கடினமாக உழைக்கின்றனர். இந்த காந்தாரி படம் ஒரு Opportunity, ஊக்கமளிக்கும் வகையிலும் இருக்கிறது. தற்போது படத்தின் கடைசி கட்டத்திற்கு முன்னேறியுள்ளோம். ஏனெனில், நீங்கள் இன்னும் இல்லாத ஒன்றை அடைவதற்காக, இதுவரை செய்யாத ஒன்றை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.