Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

‘டீசல்’ படம் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும்… இயக்குனர் வெற்றிமாறன் கொடுத்த டீசல் படத்திற்கான முதல் விமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ போன்ற தனது அடுத்தடுத்த வெற்றி படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக ஹரிஷ் கல்யாண் உள்ளார். இவர் தற்போது தன் கைவசத்தில் “நூறு கோடி வானவில், அந்தகாரம்” ஆகிய படங்களை வைத்துள்ளார்.

இதற்கிடையில், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ‘டீசல்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் ஹரிஷ் கல்யாண் கரியரில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாகும். இதில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் சிங்கிளான ‘பீர்’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. விரைவில் இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ளது.  

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான வெற்றி மாறனுக்கு ‘டீசல்’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த வெற்றி மாறன், ‘டீசல்’ படத்திற்கான முதல் விமர்சனத்தை வழங்கியுள்ளார். அதாவது, “படம் நன்றாக வந்திருக்கிறது, நிச்சயம் படம் நல்ல வரவேற்பைப் பெறும்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News