தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நந்தமுரி கல்யாண் ராம். இவர் பிரபல நடிகர் நந்தமுரி ஹரிகிருஷ்ணாவின் மகனாக உள்ளார். நந்தமுரி கல்யாண் ராம் நடித்த அதானொக்கடே, ஹரே ராம், 118 போன்ற ஆக்ஷன் படங்கள் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றன.

தற்போது, இவர் தனது 21-வது திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு “அர்ஜுன் s/o வைஜெயந்தி” என பெயரிடப்பட்டுள்ளது. நடிகை விஜயசாந்தி, சோஹல் கான் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் 18ம் தேதி வெளியாக இருக்கிறது.
இதையொட்டி, கல்யாண் ராம் ஒரு உணர்ச்சிப்பூர்வமான உரையை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “பெண்களுக்கு மரியாதை கொடுப்பது மற்றும் அவர்களை பாதுகாப்பது நமது கடமை. ஒருத் தாயின் அன்பை யாராலும் மாற்ற முடியாது. தயவுசெய்து அவர்களிடம் கோபமாக இருக்காதீர்கள். நம்முடைய வாழ்க்கையில் எதையும் நாம் சாதித்திருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் நம் தாய்மார்தான். அவர்களில்லாமல் நாம் ஒன்றுமே அல்ல. ‘அர்ஜுன் S/O வைஜெயந்தி’ திரைப்படம் தாய்மார்கள் செய்த தியாகங்களை வெளிக்கொண்டு வருகிறது” என கூறியுள்ளார்.