இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், நடிகர்கள் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் இணைந்து நடித்த ‘லால் சலாம்’ திரைப்படம், வெளியானபோது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில், படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை.

மேலும், இந்த படத்தின் தோல்விக்கு பிறகு, படத்தின் முக்கியமான காட்சிகள் உள்ள ஹார்ட் டிஸ்க் திருடப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் கடும் விமர்சனங்களைத் வைத்தனர். இப்படியான பிரச்னைகளால், இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகாமல் ஓராண்டுக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போது, ‘லால் சலாம்’ திரைப்படம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஓடிடி பதிப்பில் சில புதிய காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்ற தகவலும் வெளியாகியுள்ளது.