Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கும் FICCI நிகழ்ச்சி… ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் பொழுதுபோக்கு துறை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சினிமா உள்ளிட்ட இந்திய பொழுதுபோக்கு துறையின் மாநாடு (பிக்கி) சென்னையில் வரும் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் இந்த மாநாட்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார். சிறப்பு அழைப்பாளராக நடிகர் கமல்ஹாசன் இதில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

மாநாட்டு குழுவினர் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவின் பொழுதுபோக்கு துறையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதில், பிராந்திய மொழிகளின் பங்கு மிகவும் முக்கியமாக மாறியுள்ளது. இவ்வாறான சூழலில், தென்னிந்தியாவை மையமாகக் கொண்டு சென்னையில் இந்த மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

திரைப்படம், தொலைக்காட்சி, ஓடிடி, கேமிங், அனிமேஷன், மற்றும் டிஜிட்டல் உள்ளிட்ட பொழுதுபோக்கு துறையின் அனைத்து பிரிவுகளின் எதிர்காலத்தை விவாதிக்கும் ஒரு முக்கிய மேடையாக இந்த மாநாடு அமையும். இந்தியாவின் பொழுதுபோக்கு துறையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இது செயல்படும்.இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், பொழுதுபோக்கு துறையின் பல்வேறு பிரிவுகளைப் பற்றிய அமர்வுகள், கலந்துரையாடல்கள், பட்டறைகள், சந்திப்புகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளன.

- Advertisement -

Read more

Local News