மலையாளத்தில் ‘தள்ளுமாலா’, ‘உண்டா’, ‘ஒன்’, ‘ஆப்ரேஷன் ஜாவா’, ‘சாவேர்’ போன்ற பல படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர் நிஷாத் யூசுப் (43 வயது). 2022ல் வெளியான ‘தள்ளுமாலா’ படத்திற்காக கேரள அரசின் சிறந்த எடிட்டர் விருதைப் பெற்றவர். தற்போதும் மோகன்லால் மற்றும் மம்முட்டி நடிப்பில் தயாராகும் படங்களுக்கான எடிட்டராக பணிபுரிந்து வருகிறார்.
தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்திலும் நிஷாத் எடிட்டராக பணியாற்றியுள்ளார். அடுத்ததாக சூர்யா நடிக்கவுள்ள, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் ‘சூர்யா 45’ படத்திற்கும் இவரே எடிட்டர். இந்நிலையில், இன்று (அக்.30) அதிகாலை 2 மணிக்கு கொச்சி பனம்பில்லி நகரில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் காலமானார். அவரது மரணத்தின் காரணம் இதுவரை வெளிப்படவில்லை.
நிஷாத் யூசுப்பின் திடீர் மரணம் மலையாள திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர் பணியாற்றிய முக்கிய படைப்பான ‘கங்குவா’ வெளியாவதற்குமுன் அவரது மரணம் நிகழ்ந்தது திரையுலகினர் மனதை நெகிழச்செய்துள்ளது.