ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் வள்ளியின் வேலன் தொடரிலிருந்து அதன் இயக்குநர் பிரதாப் மணி திடீரென நீக்கப்பட்டுள்ளார். சித்து மற்றும் ஸ்ரேயா அஞ்சன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவரும் இந்த தொடர், சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி, பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆர்வமூட்டும் திரைக்கதையுடன், டிஆர்பி ரேட்டிங்களிலும் நல்ல முன்னேற்றம் கண்டுவரும் இந்த தொடரை இயக்குநர் பிரதாப் மணி இயக்கி வந்தார்.

அவர், நடிகர்களிடம் மோசமான முறையில் நடத்திக்கொள்வதாகவும், ஒருமையில் பேசுவதாகவும் ஏற்கனவே பல புகார்கள் எழுந்திருந்தன. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகையுடன் ஏற்பட்ட பிரச்சினையால், நிலைமை மேலும் மோசமானதாகியுள்ளது.
இதனை தொடர்ந்து, அதிருப்தியடைந்த நிர்வாகத்தினர், இயக்குநர் பிரதாப் மணியை தொடரிலிருந்து நீக்கியுள்ளனர். அவருக்குப் பதிலாக, இயக்குநர் ஜீவா இந்த தொடரை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.