Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

தனுஷின் இட்லி கடை படத்தை தயாரிக்கும நிறுவனத்துடன் புதிய படத்தில் கமிட்டான லப்பர் பந்து பட இயக்குனர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரிக்கெட், குடும்பம், காதல் ஆகியவற்றை மையமாக கொண்டு வெளிவந்த இப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு அடுத்த படத்திற்காக பல தயாரிப்பு நிறுவனங்கள் அவரை அணுகி வருகின்றன. 

இந்நிலையில், தனுஷை வைத்து இட்லி கடை படத்தை தயாரித்து வரும் டாவுன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் அவர் அடுத்த படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்திற்காக தமிழரசன் பச்சமுத்துவிற்கு ரூ. 1 கோடி சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News