குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் முடிந்துள்ளதாக படக்குழு சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்படிருந்தது. திரைப்படம் முதலில் வரும் பொங்கலுக்கு வெளியிடப்படும் என அறிவித்து இருந்தனர். ஆனால் இந்த பொங்கலுக்கு அஜித் நடிக்கும் விடாமுயற்சி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதனால் குட் பேட் அக்லி திரைப்படம் மே மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் ஆதிக் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். எல்லாரும் இந்த ஆண்டு நல்ல ஆண்டாக அமையும். முதல்ல விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வருது. அத பாத்து ரசிகர்கள் கொண்டாடுவாங்க அதுக்கு அப்பறம் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகும் என கூறியுள்ளார்.
ஆனால் நேற்று திடீரென லைக்கா நிறுவனம் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகது என அறிக்கை விட்டு அறிவித்துள்ளது. இந்நிலையில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி எந்த திரைப்படம் தற்போது முதலில் வெளியாகும் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.