Monday, November 18, 2024

மின்னல் முரளி படத்தின் கதாபாத்திரங்களை பயன்படுத்த தடை விதித்தது நீதிமன்றம்… காரணம் என்ன தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் “மின்னல் முரளி” எனும் திரைப்படம் வெளியானது, இது சூப்பர்மேன் கதையம்சம் கொண்டதாக இருந்தது மற்றும் அது நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தில், கிராமத்தில் வாழும் இரண்டு இளைஞர்களுக்கு திடீரென மின்னல் தாக்கி, ஒரே நேரத்தில் சூப்பர்மேன் சக்தி கிடைக்கிறது. அதில் ஒருவர் அந்த சக்தியை நல்வழியில் பயன்படுத்த, மற்றொருவர் தீய வழியில் பயன்படுத்துகின்றனர் என்பதாக கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்த வித்தியாசமான கதையுடன் உருவாக்கப்பட்ட படத்தை பசில் ஜோசப் இயக்கியிருந்தார், மேலும் மின்னல் முரளி கதாபாத்திரத்தில் டொவினோ தாமஸ் நடித்திருந்தார். இந்த படத்தை தயாரிப்பாளர் ஷோபியா பால் தயாரித்திருந்தார்.

இந்த தயாரிப்பு நிறுவனம் தற்போது நடிகரும் இயக்குனருமான தியான் சீனிவாசன் நடிப்பில் “டிடெக்டிவ் உஜ்வாளன்” என்ற புதிய படத்தை தயாரிக்கின்றனர். இதில், தமிழில் எல்சியு போல ஒரு சினிமாடிக் யுனிவர்சாக உருவாக்கப்பட்டிருக்கும், மேலும் “மின்னல் முரளி” கதாபாத்திரங்களும் இதில் இடம்பெறுமாம்.

இந்த சூழலில், “மின்னல் முரளி” படத்தின் கதாசிரியர்களான அருண் அனிருத்தன் மற்றும் ஜஸ்டின் மேத்யூ, “மின்னல் முரளி” படத்தின் கதாபாத்திரங்களுக்கு உரிமையாளர்கள் நாங்கள் தான் எனக் கூறியுள்ளனர். எனவே, “மின்னல் முரளி” படத்தின் கதாபாத்திரங்களை மற்ற படங்களில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று, படத்தின் தயாரிப்பாளரும், புதிய பட தயாரிப்பில் இணைந்திருக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தையும் எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், காப்பிரைட் விதிமீறல் அடிப்படையில், மேற்படி தயாரிப்பு நிறுவனங்களுக்கு “மின்னல் முரளி” படத்தின் கதாபாத்திரங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News