வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் 2021ல் வெளியான படம் ‘மாநாடு’. 100 கோடி வசூலைக் கடந்த வெற்றிப் படமாக அமைந்தது. இப்படம் வெளியாகி இன்றுடன் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதுகுறித்து இயக்குனர் வெங்கட்பிரபு, வெளியிட்டுள்ள நாங்கள் இந்த சுவாரசியமான டைம்-லூப் படம் மாநாடு உருவாக்கியபோது, ஒரு விஷயத்தை உறுதியாக நம்பினேன். எங்கள் பார்வையாளர்கள் அதைப் புரிந்து கொள்வார்கள் என்று. ஆனால் நீங்கள் அனைவரும் நாங்கள் கற்பனை செய்ததை விட அதிகமாக அதைப் புரிந்துகொண்டீர்கள்!சினிமாவில் சோதனைகளை கொண்டாடியதற்கு நன்றி. நீங்கள் எங்களை எல்லைகளைத் தள்ள வைக்கிறீர்கள்.. நம்பிக்கைக்கு நன்றி என படக்குழுவினரை டேக் செய்து நன்றி தெரிவித்துள்ளார்.


