Touring Talkies
100% Cinema

Wednesday, August 13, 2025

Touring Talkies

‘பரதா’ படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் என்றும் மறக்க முடியாத ஒன்று – நடிகை அனுபமா எமோஷனல் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை அனுபமா‌ கடைசியாக பிரதீப் ரங்கநாதன் நடித்திருந்த டிராகன் படத்திலும், அதேபோல் சுரேஷ் கோபி நடித்திருந்த ஜே.எஸ். கே படத்திலும் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். 

இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ”பரதா” படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக படக்குழுவினருடன் விஜயவாடாவிற்கு சென்றிருந்தார். அங்கு ஏராளமான ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் என்றும் மறக்கமுடியாதது. மேலும், இந்த கதாபாத்திரத்திற்காக தான் மிகவும் கடினமாக உழைத்ததாகவும் இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது எளிதானது கிடையாது என அவர் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கி பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை சங்கீதா மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் நடித்துள்ளனர். பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

- Advertisement -

Read more

Local News