சினிமா உலகிற்கு குழந்தை பருவத்தில் அறிமுகமானவர் சுஜிதா. ‘பூவிழி வாசலிலே’, ‘முந்தானை முடிச்சு’ போன்ற படங்களில் நடித்து தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பாண்டியன் ஸ்டோர்’ (முதல் பாகம்) தொடர் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் தனித்த இடம் பிடித்தார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தற்போது சினிமா பார்த்தல் குறைந்து விட்டது என தெரிவித்தார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் சினிமாக்கள் பல மொழிகளில் அதிகமாக உருவாகி வருவதை காண முடிகிறது.
அதேபோல், தொலைக்காட்சி நாடகங்களிலும் பல புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு வருகின்றன. வீட்டில் இருக்கின்ற பெண்கள் மற்றும் பெரியவர்கள், 50 சதவீதத்துக்கும் அதிகமானோர், இத்தொடரைக் காண்கின்றனர். ஒரு நிமிட ரீல்ஸ் பிடிக்கவில்லை என்றால், அவர்கள் அதைத் தவிர்த்து விடுவதை போல் தொடரையும் தவிர்த்து விடுகிறார்கள். இன்றைய சூழலில், இது ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது என கூறியுள்ளார்.